தற்போதைய இக்கட்டான நிலைமையை கருத்திற் கொண்டு, 2025.11.25 ஆம் திகதி முதல் 2025.12.25 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடிகாலம் முடிவடையுமாயின், அனுமதிப்பத்திரத்தை புதுப்பித்துக் கொள்வதற்கு விசேட நிவாரண காலத்தை வழங்குவதற்கு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.
செல்லுபடிகாலம் நிறைவடைந்த சாரதி அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்துபவர்களை ‘வீதி சட்டத்தை மீறியதாக கருத வேண்டாம்’ இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் போக்குவரத்து பிரிவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் மோசமான சீரற்ற காலநிலை மற்றும் இயற்கை அனர்த்தங்களினால் பெரும்பாலான சாரதிகள் குறித்த தினத்தில் தமது சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பித்துக் கொள்வதற்கு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் காரியாலயத்துக்கு வருகைத் தர முடியாத நிலைமை காணப்படுகிறது.
தற்போதைய இக்கட்டான நிலைமையை கருத்திற் கொண்டு, 2025.11.25 ஆம் திகதி முதல் 2025.12.25 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடிகாலம் முடிவடையுமாயின் ,தமது சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பித்துக் கொள்வதற்கு விசேட நிவாரண காலத்தை வழங்குவதற்கு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, மேற்குறிப்பிடப்பட்ட காலத்துக்குள் செல்லுபடிகாலம் நிறைவடைந்த சாரதி அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்துபவர்களை ‘வீதி சட்டத்தை மீறியதாக கருத வேண்டாம்’ இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் போக்குவரத்து பிரிவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்த நிவாரண காலத்தில் குறித்த சாரதி தண்டப்பணம் செலுத்தாமலோ அல்லது சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தபடாமலோ எவ்வித தடையுமின்றி அனுமதிப்பத்திரத்தை புதுப்பித்துக் கொள்ளலாம்.எவ்வாறாயினும் 2025.12.25 ஆம் திகதிக்குள் சாரதி அனுமதி அட்டையை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என சாரதிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

