சீரற்ற வானிலையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 193ஆக உயர்வு!

25 0

நாட்டில் தொடர்ச்சியாக நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு மற்றும் பலத்த காற்று போன்ற அனர்த்தங்கள் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 193ஆக உயர்ந்துள்ளது என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும், 228 பேர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அதேநேரத்தில், நாடு முழுவதும் 266,114 குடும்பங்களைச் சேர்ந்த 968,304 பேர் வெள்ளப் பாதிப்பு, இடம்பெயர்வு மற்றும் சொத்து சேதங்களுக்கு ஆளாகியுள்ளனர்.

அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கூறியதுடன், புதிய அபாயங்களைத் தவிர்க்க மக்கள் அதிகாரப்பூர்வ அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.