திருகோணமலை மாவில் அணைக்கட்டு உடைப்பு – 55 பேர் விமானம் மூலம் மீட்பு!

31 0

திருகோணமலை மாவில் ஆறு அணைக்கட்டு உடைப்பையடுத்து ஏற்பட் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சேருவல, சோமாபுர, மாவில் பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட 55 பேரை இன்று ஞாயிற்றுக்கிழமை (30) இதுவரை விமான மூலம் மீட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட அனர்த்த இடை முகாமைத்துவம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு வெள்ளத்தில் இருந்து விமானம் ஊடாக மீட்கப்பட்டவர்களை சீனாபே விமான படைதளத்திற்கும் சேருவல மகாவலி விளையாட்டு மைதானத்திற்கும் கொண்டுவரப்பட்டனர்.

இதேவேளை மேலும் 22 பேர் விமான மூலம் மீட்கப்பட்டு வருகின்றதுடன் கடல் மற்றும் விமான மூலம் தொடர்ந்து மீட்கும் பணி இடம்பெற்றுவருகின்றதாக தெரிவித்தனர்.