ஜப்பானின் எச்சரிக்கையையடுத்து டிரம்ப் – ஜின்பிங் அவசர தொலைபேசி உரையாடல்

33 0

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் நேற்று தொலைபேசியில் உரையாடி, இரு நாடுகளின் உறவுகளில் முக்கியமான பல விவகாரங்கள் குறித்து கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.

உரையாடலில் வர்த்தக உறவுகள், தாய்வான் பிரச்சினை மற்றும் உக்ரைன் நிலைமை ஆகியவை கவனத்தின் மையமாக இருந்ததாக இரு தரப்பின் அறிக்கைகளிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் அதிகாரபூர்வ ஊடகமான சின்ஹுவா செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்,

“ தாய்வான் சீனாவுடன் இணைவது போருக்குப் பிந்தைய சர்வதேச ஒழுங்கின் முக்கிய கூறாகும்” என்று ஜின்பிங், டிரம்பிடம் தொலைபேசியில் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க வெள்ளை மாளிகையும் இந்த உரையாடல் நடைபெற்றதை உறுதிப்படுத்தி, இரு தலைவர்களும் பல சர்வதேச மற்றும் இருதரப்பு விடயங்களைப் பற்றி விவாதித்ததாக அறிவித்துள்ளது.

அண்மையில் ஜப்பான் பிரதமர், தாய்வானுக்கு எதிராக சீனா இராணுவ நடவடிக்கை எடுத்தால், ஜப்பானின் இராணுவம் தலையிடும் என்று கூறிய பின்னணியில், டிரம்ப் – ஜின்பிங் தொலைபேசி உரையாடல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.