பொலன்னறுவை, ஹபரணை – மட்டக்களப்பு வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
மட்டக்களப்பு வீதியில் உள்ள பாதசாரி கடவையொன்றில் வீதியை கடந்த பாதசாரி ஒருவர் மீது, வேன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த பாதசாரி பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் பொலன்னறுவை பகுதியைச் சேர்ந்த 60 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பில் வேனின் சாரதி கைத செய்யப்பட்டுள்ளார்.

