அருண பத்திரிகை பிரதம செய்தி ஆசிரியர் CIDக்கு அழைக்கப்பட்டமைக்கு கண்டனம்

22 0

பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பாக அருண பத்திரிகையின் பிரதம ஆசிரியர் மஹிந்த இலேபெருமவிடம் வாக்குமூலம் பெறுவதற்காக, அவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டமையை வன்மையாகக் கண்டிப்பதாக சுதந்திர ஊடக இயக்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற சிறப்புரிமைகள் சட்டத்தை ஊடக அடக்கு முறைக்கான ஆயுதமாக பயன்படுத்த வேண்டாம் எனவும் அந்த அறிக்கையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.