1 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது

25 0

மாதம்பிட்டிய தொடர்மாடிக் குடியிருப்பில் 1 கிலோ கிராமுக்கு அதிகளவான ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாதம்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீஜயசெவன தொடர் மாடிக்குடியிருப்பு பகுதியில் சனிக்கிழமை (22) மாதம்பிட்டி பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்து போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளனர். இதன்போது சந்தேகநபரிடமிருந்து 1 கிலோ 310 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

கைதான சந்தேகநபர் 28 வயதுடைய கொழும்பு 15 பகுதியை சேர்ந்தவராவார். சந்தேகநபர் தொடர்பில் மாதம்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.