கடலோர ரயில் போக்குவரத்து வெலிகம வரை மட்டுப்படுத்தப்படும் – ரயில்வே திணைக்களம் அறிவிப்பு

25 0

கடலோர ரயில் மார்க்கத்தினூடான போக்குவரத்து வெலிகம வரை மட்டுப்படுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை (21) பிற்பகல், மாத்தறையிலிருந்து மருதானை நோக்கிச் செல்லும் ரயில், கம்புருகமுவ மற்றும் வெலிகம ரயில் நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டுள்ளது.

இருப்பினும், ரயில்வே ஊழியர்கள் மீண்டும் நிலைமைக்கு nhகண்டுவந்துள்ளனர். ஆனால் ரயில் அதே இடத்தில் மீண்டும் தடம் புரண்டுள்ளது.

அதன்படி, ரயிலை மீண்டும் சீர்செய்யப்பட்டு நிலைமைக்கு கொண்டுவரும் பணி தற்போது நடைபெறுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.இதன் காரணமாக, கடலோர ரயில் மார்க்கத்தினூடான ரயில் போக்குவரத்து கொழும்பிலிருந்து வெலிகம வரை மட்டுப்படுத்தப்படும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.