வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க, நேற்று வெள்ளிக்கிழமை (21) திருகோணமலை மாவட்டத்திற்கு விஜயம் செய்திருந்தார்.
இந்த விஜயத்தின் போது, திருகோணமலை மாவட்டத்தில் குடிநீர் விநியோகத்தில் உள்ள குறைபாடுகள் மற்றும் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் விநியோகத்தை வழங்குவதற்காக அமைப்பில் செயற்படுத்தப்பட வேண்டிய குறுகிய கால மற்றும் நீண்ட கால திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
அல்ல கந்தளாய் நீர் உந்தி நிலையம், கந்தளாய் நீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் கப்பல்துறை நீர் உந்தி நிலையம் ஆகியவை மீண்டும் செயற்பட எதிர்பார்க்கப்படுகின்றன,
கந்தளாய், வான் எல, கிண்ணியா, தம்பலகாமம் போன்ற பகுதிகளுக்கு தொடர்ச்சியான நீர் விநியோகத்தை வழங்குவதற்கும் எதிர்கால தேவைகளை பூர்த்திசெய்யப்படவுள்ளது.
திருகோணமலை நகரத்திற்கு தொடர்ச்சியான நீர் விநியோகத்தை உறுதி செய்வதற்கும், சுற்றுலாத் துறையின் வளர்ச்சியுடன் எதிர்பார்க்கப்படும் நீர் தேவையை பூர்த்தி செய்வதற்கும், பொருளாதார நெருக்கடி காரணமாக நிறுத்தப்பட்ட கப்பல்துறை நீர் உந்தி நிலையத்தின் பணிகளுக்கும் அடுத்த ஆண்டு நிதி ஒதுக்கப்பட்டது.
மொரவெவ, கோமரன்கடவல, ஸ்ரீ புர, குச்சவெளி, புல்ட்டை ஆகிய பகுதிகளின் குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக மேற்கொள்ளப்படவுள்ள பெரிய அளவிலான நீர் வழங்கல் திட்டங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
ஏற்கனவே பணிகள் தொடங்கப்பட்டுள்ள மூதூர் நீர் வழங்கல் திட்டம், மூதூர், சேருவில நிலபொல மற்றும் செல்வநகர் போன்ற பகுதிகளில் குடிநீர் பிரச்சினையை முழுமையாக தீர்க்க முடியும்.
மேலும், மாவட்டத்தின் பிரதான வீதி அமைப்பின் கீழ் இயங்கும் நீர் வழங்கல் அமைப்பின் குழாய் அமைப்புகளை முறையாக மறுசீரமைக்க வேண்டியதன் அவசியமும் இங்கு விவாதிக்கப்பட்டது.

