“ஆரம்பிக்கையிலேயே திருட்டு பழக்கத்துல ஆரம்பிச்சா கடைசி வரைக்கும் திருட்டுப் பழக்கம் தான் இருக்கும்” என மல்லை சத்யா தொடங்கியுள்ள கட்சியின் பெயர் குறித்த கேள்விக்கு மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ கிண்டலாகப் பதிலளித்தார்.
அரியலூர் மாவட்டம் கள்ளூரில் திருமண நிகழ்ச்சி ஒன்றுக்காக வந்திருந்த துரை வைகோ அங்கு செய்தியாளர்களிடம் கூறியது: ஒரு இயக்கத்தை ஆட்சிக்கு கொண்டு வருவது மக்கள் சக்தி. ஆனால், பஞ்சாங்கத்தை பார்த்து இந்தக் கட்சி ஆட்சிக்கு வரும், அந்தக் கட்சி ஆட்சியை இழக்கும் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியிருப்பது நகைப்புக்குரியது. அவர் ஒரு நல்ல அரசியல்வாதி. சேரக்கூடாத இடத்தில் சேர்ந்துள்ளார்.

