2025 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் 2,002,241 மில்லியன் ரூபாய் வரி வருமானத்தை ஈட்டியுள்ளதாக அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டின் மொத்த வரி வருமானம் 1,942,162 மில்லியன் ரூபாய் ஆகும்.
அதன்படி, 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் 60,079 மில்லியன் ரூபாய் வரி வருமானம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதிக கூடிய வரி வருமானத்தை ஈட்டியதால் அரச நிதி நிலையினை பலமாக முன்னெடுப்பதற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அதிகளவு பங்களிப்பை வழங்கியுள்ளது.
நாட்டின் சட்டங்களுக்கு அமைய வரி செலுத்தியர்களுக்கும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அரச மற்றும் தனியார் நிறுவனங்களும் நன்றி எனவும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.


