தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு திருத்தங்களை கொண்டு வருவதற்கு அரசாங்கம் கருதுவதாக வெளிவந்திருக்கும் ஊடக அறிக்கைகளை கருத்தில் கொண்டு, தகவல் அறியும் உரிமை தொடர்பிலான சட்டத்திற்கு தேவையாக இருப்பது திருத்தங்கள் இல்லை என்பதை சமூக நீதிக்கான தேசிய இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் சுனில் ஜயசேகர விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தற்போது இந்த ஆணை குழு முகம் கொடுத்து வரும் சிக்கல்களையும், வள பற்றாக்குறையும், பதவிகளுக்கான வெற்றிடங்களை பூர்த்தி செய்வதும் தற்போதைய தேவையாக இருக்கின்றது. நாம் அறிந்த வகையில் ஆணைக் குழு பாரிய வளப்பற்றாக்குறை மற்றும் பதவி வெற்றிடங்களுடன் காணப்படுவதை குறிப்பிடலாம்.
மேலும் மக்களுக்கு தகவல் அறிவதற்கான உரிமை இருக்கும் சில விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் சில பிரிவுகள் தகவல்களை வழங்க மறுப்பது தகவல் அறியும் ஆணைக் குழுவின் மதிப்பை குறைக்கும் நடவடிக்கைகளாக கருதப்படுகிறது. ஊழல் எதிர்ப்பு செயல் முறையின் போது தகவல் உரிமை ஊடாக கிடைக்கும் பங்களிப்பை அரசாங்கம் பாராட்ட வேண்டும்.
உண்மையிலேயே அரசாங்கம் இது போன்ற விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். ஆகையால் விரைவில் இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கின்றோம்.

