திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய தேவாலய பூசாரி கைது!

20 0

குடாஓயா பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் கதவை உடைத்து 7 இலட்சத்து 70 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடிச் சென்ற தேவாலய பூசாரி ஒருவர் குடாஓயா பொலிஸாரால் கடந்த 17 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த திருட்டு சம்பவம் கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 09 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்டவர் மாகொல பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய தேவாலய பூசாரி  ஒருவர் ஆவார்.

சந்தேக நபரான தேவாலய பூசாரியிடமிருந்து திருட்டு நகைகளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குடாஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.