மாவீரர் பணிமனையால் டுசுல்டோவ் நகரில் மிக எழுச்சியாக நினைவுகூரப்பட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களின் 18ஆவது ஆண்டு நினைவுவணக்க நிகழ்வு!
16 .11.2025 ஞாயிற்றுக்கிழமை தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களின் 18ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, தமிழர் ஒருங்கிணைப்புப் குழு யேர்மனிக்கிளையின் மாவீரர் பணிமனையால் டுசுல்டோவ் நகரில் மிக எழுச்சியாக நினைவுகூரப்பட்டது. இவ்வெழுச்சி நிகழ்வானது பொதுச்சுடரேற்றலுடன், தமிழீழத் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலர்மாலை அணிவிக்கப்பட்டது.
தொடர்ந்து அகவணக்கத்துடன் சுடர்,மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. இவ்வெழுச்சி நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டிருந்ததுடன் நிகழ்வுகளாக வணக்கப்பாடல்கள், கவிவணக்கம், நினைவுரை, எழுச்சி நடனங்கள் போன்றன இடம்பெற்றன. சிறப்புரையை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் அரசியற்பிரிவுப் பொறுப்பாளர் திரு:திருநிலவன் அவர்கள் ஆற்றினார். நிகழ்வின் இறுதியாக தமிழீழத் தேசியக்கொடி கையேற்றப்பட்டு, நம்புங்கள் தமிழீழம் பாடல் அனைவராலும் பாடப்பட்டதோடு, எமுது தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் நிறைவுபெற்றன.


























