மருந்து வகைகளின் பெயர்களை தெளிவாக எழுதுமாறு வைத்தியர்களுக்கு எச்சரிக்கை!

27 0

இலங்கையில் உள்ள வைத்தியர்களுக்கு இலங்கை மருத்துவ சபை முக்கிய அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

வைத்தியர்கள் மருந்துச் சீட்டுகளில் தெளிவற்ற முறையில் மருந்து வகைகளின் பெயர்களை எழுதுவதால் மருந்துகளை அடையாளம் காண சிரமமாக உள்ளமாக மருந்தாளர்கள் மற்றும் பொதுமக்கள் முறையிடுவதாக இலங்கை மருத்துவ சபை தெரிவித்துள்ளது.

வைத்தியர்கள் மருந்துச் சீட்டுகளில் மருந்து வகைகளின் பெயர்களை எழுதும் போது தெளிவாகவும் மருந்து பரிந்துரைப்பது தொடர்பான  வழிகாட்டுதல்களுக்கு அமையவும் எழுத வேண்டும் என இலங்கை மருத்துவ சபை தெரிவித்துள்ளது.

மருந்துச் சீட்டுகளில் உள்ள மருந்து வகைகளின் பெயர்கள் தெளிவற்றதாக இருக்கும் போது நோயாளிகள் தவறாக மருந்துகளை பெற்றுக்கொள்ள கூடும் எனவும் இது உயிருக்கு மிகவும் ஆபத்தானது எனவும் இலங்கை மருத்துவ சபை தெரிவித்துள்ளது.

மருந்து பரிந்துரைப்பது தொடர்பான  வழிகாட்டுதல்களை மீறும் வைத்தியர்களுக்கு  எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை மருத்துவ சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.