மேல்மாகாணத்தில் வாகன திருட்டு அதிகரிப்பு

22 0

மேல்மாகாணத்தில் வாகன திருட்டு அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப். யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.

இன்று செவ்வாய்க்கிழமை (11) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவிக்கையில்,

விசேடமாக கொழும்பு  நகரத்தில் வீதியில் நிறுத்தி வைக்கப்படும் முச்சக்கரவண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் திருடப்படுகிறது.

நவம்பர் 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் மாத்திரம் மேல்மாகாணத்தில் 10 மோட்டார் சைக்கிள்களும் 3 முச்சக்கரவண்டிகளும் திருடப்பட்டுள்ளதாக பதிவாகியள்ளது.வாகன திருட்டு தொடர்பில் பல முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பல்வேறு குற்றச் செயல்களுக்கு பயன்படுத்துவதற்காகவும் வாகனங்கள் திருடப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.