நாளாந்த பொலிஸ் சோதனையில் மேலும் பலர் கைது

22 0

பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட நடவடிக்கைகளின் கீழ் நேற்றும் (10) பலர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நடவடிக்கைகளின் போது நாடு முழுவதும் 31,594 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

அவர்களில் சந்தேகத்தின் பேரில் 693 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது குற்றச் செயல்களுடன் நேரடியாகத் தொடர்புடைய 31 பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 288 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், 178 திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்களும் இந்த சோதனை நடவடிக்கையின்போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் மதுபோதையில் வாகனம் செலுத்திய 22 சாரதிகளும், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய16 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேநேரம் போக்குவரத்து விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 4,320 பேருக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.