கெஹலியவின் மகன் ரமித் ரம்புக்வெல்லவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

23 0

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்லவுக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு, கொழும்பு மேல்நீதிமன்றில் இன்று செவ்வாய்க்கிழமை (11)குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

சட்டவிரோதமாக சொத்துக்களை குவித்ததாக  இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் ரமித் ரம்புக்வெல்லவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு மேல்நீதிமன்ற நீதவான் மொஹமட் மிஹால் முன்னிலையில் இன்று அழைக்கப்பட்டது.

இதன்போது நீதிமன்றில் ஆஜரான இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள், ரமித் ரம்புக்வெல்லவுக்கு எதிராக  குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இதனை பரிசீலித்த கொழும்பு மேல்நீதிமன்ற நீதவான், ரமித் ரம்புக்வெல்லவை குறித்த வழக்கிலிருந்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ரொக்கு பிணை மற்றும் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில்  விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டார்.