விஜய் மனிதாபிமானம் மிக்கவரா?- துரைமுருகன் கேள்வி

50 0

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், கரூர் சம்பவம் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டசபையில் பேசியது குறித்து விஜய் காட்டமாக பதில் அளித்திருந்தார்.

மனிதாபிமானம் இல்லாமல் முதல்வர் ஆதாயம் தேடுகிறார் எனக் குற்றம்சாட்டினார்.இந்த நிலையில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் “41 பேர் மரணத்திற்கு காரணமாக இருந்தவர் மனிதாபிமானம் மிக்கவரா?.

பாதிக்கப்பட்டவர் வீட்டிற்கு சென்று நேரில் பார்க்காமல் இருந்த விஜய் மனிதாபிமானம் உள்ளவரா?. த.வெ.க. தலைவர் விஜய் மிகுந்த மனிதாபிமானம் உள்ளவர். நாங்க மனிதாபிமானம் இல்லாதவரா? ” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.