எதிர்க்கட்சி திட்டமிட்ட, மக்கள் ஆட்சிக்கான பட்ஜெட்டும் முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கிறோம்

22 0

இம்முறை எதிர்க்கட்சியில் இருந்து உருவாக்கப்பட்ட திட்டமிட்ட, மக்கள் ஆட்சியின் பட்ஜெட் முன்வைக்கப்படும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளருமான துமிந்த திசாநாயக்க, அரசாங்கத்தின் போதைப்பொருள் பறிமுதல் நடவடிக்கை நல்லது, ஆனால், போதைப்பொருள்களுக்கு என்ன நடக்கிறது என்பது குறித்து மக்களுக்கு விழிப்பூட்ட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை குறித்த சுதந்திரக் கட்சியின்  நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவதற்காக கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே  துமிந்த திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறிய விடயங்களாவன :

முதல் பட்ஜெட்டில் ஜனாதிபதி போதுமான அளவு கடினமாக வேலை செய்தார். இந்த முறை ஒரு திட்டமிட்ட பட்ஜெட்டை முன்வைக்கும் திறன் அவர்களுக்கு உள்ளது.

மேடைகளில் கூறிய மக்கள் ஆட்சியின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவது தொடர்பில் நாங்கள் கவனித்துக்கொண்டிருக்கிறோம்.  எனினும், அழகான பேச்சுக்கள், வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.