சுவிஸ் நாட்டு முதியவர் ஒருவர் தென்கொரியாவில் கைது

56 0

சுவிஸ் நாட்டவரான 80 வயது முதியவர் ஒருவர் தென்கொரியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.அ பாயகரமான போதைப்பொருள் ஒன்றை தென்கொரியாவுக்குள் கொண்டுவந்தததற்காக அந்த முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆனால், சமூக ஊடகம் வாயிலாக தன்னை சந்தித்த ஒருவர், தன்னிடம் ஒரு சூட்கேசைக் கொடுத்து, அதை தென்கொரியாவிலிருக்கும் ஜப்பான் நாட்டு வங்கியாளர் ஒருவரிடம் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டதாக தெரிவித்துள்ளார் அந்த முதியவர்.

 

சுவிஸ் நாட்டு முதியவர் ஒருவர் தென்கொரியாவில் கைது: அதிர்ச்சிப் பின்னணி | Swiss Octogenarian Convicted Of Drug Smuggling

அத்துடன், அந்த சூட்கேசுக்குள் போதைப்பொருள் இருந்தது தனக்குத் தெரியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

அதேநேரத்தில், அந்த சூட்கேசை தென்கொரியாவுக்குள் கொண்டு சென்றால் அவருக்கு 6.8 மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள் கிடைக்கும் என அந்த சூட்கேசைக் கொடுத்தவர் கூறியுள்ளார்.

 

ஆக, அந்த சூட்கேசுக்குள் போதைப்பொருள் இருந்தது அவருக்குத் தெரியுமா தெரியாதா என்பதை அதிகாரிகளால் உறுதி செய்யமுடியாவிட்டாலும், அதற்குள் போதைப்பொருள் இருந்தது தெரிந்தாலும் அவர் அதைக் கொண்டுவந்திருப்பார் என நீதிமன்றம் கூறியுள்ளது.

ஆகவே, அவருக்கு தென்கொரியாவில் மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.