வடக்கு கடற்பரப்பில் கைதான இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

36 0

வடக்கு கடற்பகுதியில் கைது செய்யப்பட்ட 31 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் நேற்று (3) உத்தரவிட்டுள்ளது.

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் இலங்கை கடற்படையினால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்கள்  பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்ட மேலும் 4 இந்திய மீனவர்கள் இன்று  நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

குறித்த நால்வர் தொடர்பில், சந்தேகம் ஏற்பட்ட நிலையில் அவர்கள் நேற்று  நீதிமன்றத்தில் முன்னிலை படுத்தப்படாமல் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.

தற்போதைய  நிலவரப்படி தமிழகத்தைச் சேர்ந்த 74 மீனவர்கள் இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 40 படகுடன் 310 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.