ரஜரட்ட பல்கலைக்கழக பேராசிரியர்களின் பணிப்புறக்கணிப்பு தொடர்கிறது!

35 0

ரஜரட்ட பல்கலைக்கழகத்திற்கு நிரந்தர துணைவேந்தரை நியமிக்காமை உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்னிறுத்தி ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் தீர்வு கிடைக்கப்பெறாமையினால் தொழிற்சங்க போராட்டம் தொடர்வதாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் சங்கம் இன்று (3) தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கல்வி அதிகாரிகள் உடனடியான தீர்வுகளை வழங்க வேண்டும் என்று அந்த சங்கத்தின் தலைவர், பேராசிரியர் நாலக கீகியனகே தெரிவித்துள்ளார்.