உலகின் பசியைப் போக்க பங்காற்றியவர் எம்.எஸ்.சுவாமிநாதன்

29 0

இந்​தியா மட்​டுமின்​றி, உலகின் பசி​யையே போக்க பங்​காற்​றிய​வர் எம்​.எஸ்​.சு​வாமி​நாதன் என்று மநீம தலை​வர் கமல்​ஹாசன் புகழாரம் சூட்​டி​யுள்​ளார். மறைந்த வேளாண் விஞ்​ஞானி எம்​.எஸ்​.சு​வாமி​நாதன் வாழ்க்கை வரலாற்றை ‘தி மேன் ஹு ஃபெட் இந்​தி​யா’ (The Man Who Fed India) என்ற தலைப்​பில் பிரி​யம்​பதா ஜெயகு​மார் எழு​தி​யுள்​ளார்.

இந்த நூல் வெளி​யீட்டு விழா, சென்னை தரமணி​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் சிறப்பு விருந்​தின​ராக தகவல் தொழில்​நுட்​பத் துறை அமைச்​சர் பழனிவேல் தியாக​ராஜன் பங்​கேற்​றார். மநீம தலை​வர் கமல்​ஹாசன், நூலை வெளி​யிட்டு பேசி​ய​தாவது: எம்​.எஸ்​.சு​வாமி​நாதன் இந்​தி​யா​வின் பசி​யைப் போக்​கிய​வர் என்று மட்​டுமே கூறி​விட முடி​யாது. அவர் உலகத்​தின் பசி​யைப் போக்க பங்​காற்​றிய​வர். கடந்த 2,000 ஆண்​டு​களுக்கு முன்பு அன்​ன​வாசல் என்ற பெயரில் ஜைனர்​கள் உணவு வழங்​கினர்.ஆனால், அறி​வியல் ரீதி​யாக இந்​தி​யாவை அன்​ன​வாசலாக மாற்றிய​வர் சுவாமி​நாதன். ‘இந்​தி​யா​வில் பசி​யைப் போக்க முடி​யாது, உணவுத் தேவை​யில் இந்​தியா தன்​னிறைவு அடைய முடி​யாது’ என்று பலர் கூறினர். தொடர் பஞ்​சத்​தின்​போது இந்​தி​யா​வுக்கு அமெரிக்கா கோதுமை வழங்​கியது.அந்த நாட்​டில் தகு​தி​யற்​ற​தாக பார்க்​கப்​பட்ட அந்த கோதுமை நமக்கு நன்மை தரக்​கூடிய​தாக இருந்​தது. இது உதவி என்ற பெயரில் நமக்கு கொடுக்​கப்​பட்ட அவமானம். இந்த அவமானத்தை நீக்​கி, உணவுப் புரட்​சியை ஏற்​படுத்​தி​ய​தில் எம்​.எஸ்​.சு​வாமி​நாதன் மற்​றும் விஞ்​ஞானி நார்​மன் பார்லா ஆகியோ​ருக்கு முக்​கிய பங்கு உண்​டு.

எடை குறை​வான நெல்லை இவர்​கள் கண்​டு​பிடித்​தனர். உணவுப் பாது​காப்​பு​தான் தேசியப் பாது​காப்பு என்​பதை ஒரு சிலரே உணர்ந்​தனர். நாம் உணவு உற்​பத்​தி​யில் தன்​னிறைவு அடை​யா​விட்​டால் ஒரு​போதும் காலனித்​துவ சக்​தி​களுக்கு எதி​ராக நிற்க முடி​யாது என்​பதை சுவாமி​நாதன் புரிந்​து​கொண்​டார்.

அவர் இல்​லாமல், இந்​தியா தனது சொந்த விருப்​பங்​களைத் தேர்ந்​தெடுக்​கும் கொள்கை சுதந்​திரத்தை பெற்​றிருக்க முடி​யாது. சுவாமி​நாதனின் வாழ்க்​கையே ஒரு பாடம். அந்த பாடத்தை உலகத்​துக்கு எடுத்​துச் செல்​லும் தூது​வன் நான். இவ்​வாறு அவர் பேசி​னார். எம்​.எஸ்​. சு​வாமி​நாதனின் மகளும், உலக சுகா​தார நிறு​வனத்தின் முன்​னாள் தலைமை விஞ்​ஞானி​யு​மான சவுமியா சுவாமி​நாதன்​ மற்​றும்​ குடும்​ப உறுப்​பினர்​கள்​ பங்​கேற்​றனர்​.