ரணில் மீண்டும் பாராளுமன்றம் வருவாரா?

36 0

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மீண்டும் பாராளுமன்றத்திற்குத் வருவாரா? என்ற கேள்விக்கு, அக்கட்சியின் தவிசாளரான வஜிர அபேவர்தன வழங்கிய பதில் தற்போது அரசியல் வட்டாரங்களில் பேசும்; பொருளாக மாறியுள்ளது. அதாவது, ‘உங்கள் பாட்டன் அல்லது பாட்டி ஒரு பணப் பொதியை வீட்டில் கட்டி வைத்திருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். ஆனால் அந்தப் பொதியில் உள்ள பணம் குட்டி போடுவது இல்லை. அப்படியான ஒரு பணப் பொதியைத்தான் ரணில் விக்கிரமசிங்க இந்த நாட்டிற்கு விட்டுச் சென்றார். அந்தப் பொதியில் உள்ள பணம் தீரும் வரை நாம் செலவழிக்க முடியும். ஆனால், அந்தப் பணம் குட்டி போடாது என்பதை யாரும் நினைவில் கொள்ள வேண்டும் என்று வஜிர அபேவர்தன குறிப்பிட்டார்.

ஆவர் தொடர்ந்தும் கூறுகையில்,

நாட்டின் பொருளாதாரம் குறித்தே இந்த உவமையை கூறினேன். நாட்டின் பொருளாதாரம் நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்து வருகிறது. இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், தேசியத் தேவையின் நிமித்தம் ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அதைச் செய்வது மிகவும் எளிமையான காரியமாகும்.

எனவே கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் குறித்து தீர்க்கதரிசனங்களை கூறினேன். அது அவ்வறே இடம்பெற்றது.

இப்போதும் ஒரு தீர்க்கதரிசனத்தை முன்வைக்கிறேன். அதாவது,  ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்த பொருளாதார திட்ட  பாதையை  அரசாங்கம் மாற்ற கூடாது. அந்தப் பாதையை மாற்றினால், இந்த நாட்டு மக்கள் மீண்டும் ஒரு பெரும் அழிவுக்கு உள்ளாவார்கள்.

எவ்வாறாயினும்  நாட்டின் தற்போதைய அரசியல் சூழல்,  ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்களை தட்டி எழுப்பியுள்ளது. நாட்டின் பொருளாதார நிலைமை மோசமடையும் பட்சத்தில், தேசிய தேவைக்காக ரணில் விக்ரமசிங்க மீண்டும் ஒருமுறை பாராளுமன்றத்திற்கு செல்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது என்றார்.