பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது!

35 0

பல குற்றங்களுக்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள சந்தேக நபர் ஒருவர் ஐஸ் போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு வடக்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தினரால், சனிக்கிழமை (01) மோதர – லெல்லம பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்போதே அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அவரிடமிருந்து, 26 கிராம் 890 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவரை மோதர பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

சந்தேக நபர் மட்டக்குளி, சமித்புர பகுதியை சேர்ந்த 25 வயதுடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபரிடம் மேற்கொண்ட மேலதிக விசாரணையின் போது, அவர் பல குற்றங்களுக்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேக நபர் என்பதும் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மோதர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.