நாட்டில் பிற்பகல் வேளையில் கடும் மழைக்கான வாய்ப்பு

29 0

சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்கள் மற்றும் அம்பாறை மாவட்டத்தில் இன்று (02) பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது

நாட்டின் ஏனைய பகுதிகளில் சீரான வானிலை நிலவும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் மூடுபனி காணப்படலாம்.

இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படும் ஆபத்துக்களை குறைத்துக் கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.