ஜேர்மனி தனது கடற்படைக்காக புதிய உயர் தொழில்நுட்ப ஆயுதத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
உலக ஆயுத போட்டியில் புதிய அத்தியாயமாக, ஜேர்மனி அதன் போர் கப்பலில் லேசர் ஆயுதத்தை அறிமுகம் செய்துள்ளது.
Rheinmetall மற்றும் MBDA நிறுவனங்கள் இணைந்து உருவாக்கிய இந்த உயர் சக்தி கொண்ட லேசர் ஆயுதம், ஜேர்மனியின் Sachsen வகை போர்க்கப்பலில் நிறுவப்பட்டு, 100-க்கும் மேற்பட்ட நேரடி சோதனைகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
இந்த லேசர் ஆயுதம், விமானங்கள் மற்றும் ட்ரோன்களை நேரடியாக அழிக்கக்கூடிய திறன் கொண்டது.
எதிர்காலத்தில், இது supersonic ஏவுகணைகள் மற்றும் பிற உயர் வேக தாக்குதல்களைத் தடுக்க மேம்படுத்தப்படும் என பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர். இது, ஐரோப்பாவிற்கு ஒரு நவீன பாதுகாப்பை முன்னிலையில் வழங்கும்.
இதேவேளை, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனது அணு ஆயுதங்களை வெளிப்படுத்தி, அமெரிக்கா ட்ரம்ப் தலைமையில் அணு சோதனைகளை மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், ஜேர்மனியின் இந்த அறிவிப்பு, பயமுறுத்தும் ஆயுதங்களை விட நவீன தொழில்நுட்பத்தை முன்னிலைப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
இந்த புதிய லேசர் ஆயுதம், எதிர்கால போர்த் தளங்களில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், குறைந்த செலவில் அதிக பாதுகாப்பை வழங்கும் திறன் கொண்டதாக கருதப்படுகிறது.
இது, ஐரோப்பிய பாதுகாப்பு துறையில் ஒரு புதிய பரிணாமத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

