இரு வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் மூவர் பலி!

24 0

நாட்டின் இரு வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்படி, சிங்கபுர, மாத்தளை பகுதிகளில் இந்த விபத்துகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

வெலி ஓயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெலி ஓயா-சிங்கபுர வீதியில் உள்ள சிங்கபுர சந்தியில் மோட்டார் சைக்கிள் ஒன்று லொறியுடன் மோதியதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த இருவரும் வெலி ஓயா பகுதியைச் சேர்ந்த 28 மற்றும் 30 வயதுடையவர்கள் ஆவர்.

இந்நிலையில், மாத்தளை- கொங்கவெல வீதியில் உள்ள பஸ் நிறுத்தத்திற்கு அருகில் பஸ் மோதியதில் மற்றொரு பாதசாரி உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் மாத்தளை, கலுதேவல பகுதியைச் சேர்ந்த 95 வயதுடையவர் ஆவார்.

இதனையடுத்து விபத்துடன் தொடர்புடைய பஸ் சாரதி  பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் .

இந்த விபத்துக்கள் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.