பந்து தாக்கியதில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவுஸ்திரேலிய இளம் கிரிக்கெட் வீரர் பென் ஆஸ்டின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
17 வயதுடைய பென் ஆஸ்டின், அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் கடந்த செவ்வாய்க்கிழமை (28) நடைபெறவிருந்த இருபதுக்கு – 20 கிரிகெட் தொடரில் பங்குபற்றுவதற்காக பயிற்சி மைதானத்தில் கிரிகெட் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, பந்து ஒன்று அவரது தலை மற்றும் கழுத்துப் பகுதிகளில் பலமாக தாக்கியுள்ளது.
இதனையடுத்து படுகாயமடைந்த பென் ஆஸ்டின், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் புதன்கிழமை (29) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பென் ஆஸ்டின் சிறந்த பந்துவீச்சாளர் மற்றும் துடுப்பாட்ட வீரர் என அவுஸ்திரேலிய கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
பென் ஆஸ்டின் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சங்கத்தில் “சிறந்த கிரிக்கெட் வீரர், சிறந்த தலைவன் மற்றும் அற்புதமான இளைஞர்” என்று அழைக்கப்படுவார் என அச்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

