திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த முகமதுஅலி என்பவர் பூ ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். நிலக்கோட்டையில் இருந்து பூக்களை வாங்கி, சவுதி அரேபியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார்.
இந்நிலையில், முகமது அலிக்கு சொந்தமான ஏற்றுமதி நிறுவனங்கள் மற்றும் கிடங்குகளில் கேரளாவில் இருந்து வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர். இதேபோல, கேரள மாநிலம் கோழிக்கோடு, மலப்புரம் ஆகிய பகுதிகளில் முகமது அலிக்குச் சொந்தமான நிறுவனங்களிலும் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர்.

