போர் விமானத்தில் பறந்தார் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு

41 0

இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு ஹரியானாவின் அம்பாலா விமானப்படை தளத்திலிருந்து இன்று புதன்கிழமை (29)  ரஃபேல் போர் விமானத்தில் பறந்தார்.

இதன்மூலம் இந்திய விமானப்படையின் (IAF) நவீன விமானத்தில் பறந்த முதல் இந்திய ஜனாதிபதி என்ற பெருமையை அவர் பெறுகிறார்.

இதற்கு முன்னர், ஜனாதிபதி முர்மு அசாமில் உள்ள தேஸ்பூர் விமானப்படை நிலையத்தில் சுகோய்-30 MKI போர் விமானத்தில் பறந்தார்.

அந்த விமானப் பயணத்தின் போது அவர் சுமார் 30 நிமிடங்கள் விமானத்தில் பறந்தார்.