தந்தையும் மகளும் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது காட்டு யானை தாக்குதல்!

48 0

அநுராதபுரத்தில் எப்பாவல – கெக்கிராவை வீதியில் மகாஇலுப்பல்லம பகுதியில் தந்தையும் மகளும் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது காட்டு யானை ஒன்று  தாக்குதல் நடத்தியுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (28) காலை 07.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

தந்தை தனது மகளை மோட்டார் சைக்கிளில் பாடசாலைக்கு அழைத்துச் செல்லும் போது வீதியில் இருந்த காட்டு யானை ஒன்று மோட்டார் சைக்கிள் மீது  தாக்குதல் நடத்தியுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற தந்தை, தனது மகளுடன் அருகில் இருந்த காணிக்குள் ஓடிச் சென்று உயிர் தப்பியுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

எப்பாவல – கெக்கிராவை வீதியில் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக திரிவதால்  அப்பகுதியில் வாழும் மக்கள் அச்சத்துடன் இருப்பதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.