நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கி ; பொலிஸார் விசாரணை!

37 0

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்தில் இருந்து துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிஸ்டல் ரக துப்பாக்கி ஒன்றே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஏதேனுமொரு குற்றச் செயலுக்காக இந்த துப்பாக்கி நீதிமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.