இராகலையில் ஆடை வர்த்தக நிலையத்தில் தீ விபத்து

44 0

நுவரெலியா இராகலையில் பிரபல ஆடை விற்பனை நிலையமொன்றில் திங்கட்கிழமை (27) இரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நுவரெலியா மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினரின் முயற்சியில் தீப்பரவல் செவ்வாய்க்கிழமை (28) அதிகாலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இந்த தீ விபத்தில் குறித்த ஆடை வர்த்தக நிலையத்தில் உள்ளே இருப்பில் வைக்கப்பட்டிருந்த ஏராளமான ஆடைகள்  எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முதலில் மின் பிறப்பாக்கி வைக்கப்பட்டிருந்த அறையில் தீப்பறவியதாகவும் இதுவே முழுவதும் பரவியதாகவும் தெரிவிக்கின்றனர் .

எனினும் தீ விபத்துக்கான உரிய  காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், மேலதிக விசாரணைகளை இராகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.