முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைந்துள்ள ஆழிவனம் இயற்கை சுற்றுலாத்தளத்துக்கு நேற்று (27) வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேரடியாகச் சென்று, அப்பகுதியை பார்வையிட்டார்.
நேரடி கள விஜயம் செய்த ரவிகரன், ஆழிவனம் சுற்றுலாத்தளத்தின் மேம்பாடு தொடர்பிலும் அவ்வேளை அரச அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
இந்த கள விஜயத்தில் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் இராஜயோகினி ஜெயக்குமாரும் இணைந்துகொண்டிருந்தார்.







