வடக்கு மாகாண உள்ளூராட்சியின் அமைச்சின் செயலாளர் அ.சோதிநாதன் மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோருக்கிடையில் திங்கட்கிழமை (27) சத்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் – கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் வன்னியில் உள்ள குறைபாடுகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் இதன்போது வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
குறிப்பாக உள்ளூராட்சி சபைகளுக்கு கனகரக இயந்திரங்களின் தேவைப்பாடு, பிரதேச சபை ஊழியர்களுக்குரிய மின்னிணைப்புப் பயிற்சி தாமதமாவதால் வீதிவிளக்குகள் திருத்தப்படாமல் உள்ள சிக்கல் நிலைமை, மன்னார், முசலி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட காயாக்குழி கிராமத்தில் பேருந்து தரிப்பிடம் அமைப்பது மற்றும் பொதுநோக்கு மண்டபம் அமைத்தல், அபிவிருத்தி நோக்கில் முன்னெடுக்கப்படும் பொதுக்கட்டுமானங்களை மக்கள் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் வினைத்திறனான வகையில் பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

