முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணித் தலைவருமான விமல் வீரவன்ச, வழக்குத் தொடுப்பவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட எந்த ஆவணங்களை ஏற்க விரும்புகிறார் என்பதை, 2025 டிசம்பர் 1ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றத்திற்குத் தெரிவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி முகமது மிஹால் உத்தரவிட்டுள்ளார்.
லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணையகத்தால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில், வீரவன்ச தனது சட்டப்பூர்வமான வருமானத்தை விட கிட்டத்தட்ட 75 மில்லியன் மதிப்புள்ள சொத்துக்களை ஈட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், வழக்குத் தொடுநர், முன்மொழியப்பட்ட 72 குற்ற ஒப்புதல் ஆவணங்களை பிரதிவாதித் தரப்பிடம் இந்த வாரம் ஒப்படைத்தார்.
இதன்போது, வீரவன்சவின் சட்டத்தரணியான, அனுர மெத்தேகொட, குறித்த ஆவணங்களை ஆய்வு செய்து, எந்த ஆவணங்களை ஏற்கத் தயாராக இருக்கிறார் என்பதை பிரதிவாதி நீதிமன்றத்திற்குத் தெரிவிப்பார் என்று கூறினார். அதன்படி, விசாரணையை டிசம்பர் 18 ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

