மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

33 0

தற்போது நிலவும் அதிக மழையுடனான வானிலை காரணமாக நாட்டில் விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய முன் எச்சரிக்கையை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மேலும் நீடித்துள்ளது.

இந்த எச்சரிக்கை இன்று (25) மாலை 4:00 மணி முதல் நாளை (26) மாலை 4:00 மணி வரையிலான காலப்பகுதிக்கு அமுலில் இருக்கும் என அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.