மரம் முறிந்து விழுந்து கரையோர ரயில் சேவைகள் பாதிப்பு!

33 0

கட்டுகொடைக்கும் காலிக்கும் இடையில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததால் கரையோர மார்க்கத்திலான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக பெலியத்தவிலிருந்து கொழும்புக்கு இயக்கப்படும் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, ஒக்டோபர் 19 முதல் நிறுத்தப்பட்டிருந்த பிரதான மார்க்கத்தின் ரயில் சேவைகள் இன்று வியாழக்கிழமை (23) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கண்டியிலிருந்து பொல்கஹவெலவிற்கும், கண்டியிலிருந்து கொழும்பு கோட்டைக்கும் இரண்டு ரயில்கள் இன்றையதினம் காலை சேவையில் ஈடுபட்டதாக ரயில் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.