2025 செப்டம்பர் மாதத்திற்கான இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டுக்கு அமைய மாதாந்திர நுகர்வோர் பணவீக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 2025 ஓகஸ்ட் மாதத்தில் 1.5% ஆக இருந்த நாட்டின் பணவீக்கம், 2025 செப்டம்பர் மாதத்தில் 2.1% ஆக அதிகரித்துள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இன்று வெளியிட்ட அறிக்கையின்படி, 2025 ஓகஸ்ட் மாதத்தில் 2.9% ஆக இருந்த உணவு வகையின் முதன்மை பணவீக்கம், 2025 செப்டம்பர் மாதத்தில் 3.8% ஆக அதிகரித்துள்ளது.
இதேபோல், 2025 ஓகஸ்ட் மாதத்தில் 0.4% ஆக இருந்த உணவு அல்லாத வகையின் முதன்மை பணவீக்கம், 2025 செப்டம்பர் மாதத்தில் 0.7% ஆக அதிகரித்துள்ளது.

