ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா அமைச்சரவையுடன் இன்று பதவி விலகல்!

39 0

ஜப்பானிய பிரதமர் ஷிகெரு இஷிபா இன்று செவ்வாய்க்கிழமை(21) தனது அமைச்சரவையுடன் பதவி விலகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்த நாட்டு நேரப்படி காலை 9 மணிக்கு நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், அமைச்சர்கள் தங்கள் ராஜனாமா கடிதங்களை சமர்ப்பித்துள்ளனர்.

இதனையடுத்து, பிரதமர் ஷிகெரு இஷிபாவின் அமைச்சரவை முறையாக பதவி விலகியுள்ளது.

ஜப்பானின் அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுக்க இரு அவைகளும் பின்னர் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆளும் லிபரல் ஜனநாயக கட்சியின் தலைவரான சானே தகைச்சி, கோமெய்ட்டோ கூட்டணியில் இருந்து விலகியதையடுத்து, லிபரல் ஜனநாயக கட்சியுடன் புதிய கூட்டணியை உருவாக்கியுள்ள ஜப்பான் புதுமைக் கட்சியின் ஆதரவுடன் வாக்கெடுப்பில் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் வாக்கெடுப்புக்குப் பின்னர், தகைச்சி அமைச்சரவை நியமனங்களை இறுதி செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தலைமை அமைச்சரவை செயலாளர் வரிசையை அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தகைச்சி பதவியேற்றதும் தனது கொள்கை திசையையும் முக்கிய அமைச்சரவைத் தெரிவுகளுக்குப் பின்னாலுள்ள நியாயத்தையும் விளக்க செய்தியாளர் சந்திப்பை நடத்துவார் என் எதிர்பார்க்கப்படுவதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.