முதலை இழுத்துச் சென்ற மீனவர் சடலமாக மீட்பு!

47 0

அம்பாந்தோட்டை, ஹுங்கம, கலமெட்டிய கடற்கரை பகுதியில் முதலை இழுத்துச் சென்ற மீனவர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை (20) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஹுங்கம பொலிஸார் தெரிவித்தனர்.

ஹுங்கம, கலமெட்டிய பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் கடந்த 18 ஆம் திகதி இரவு மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்த போது முதலை இழுத்துச் சென்றுள்ள நிலையில் இரண்டு நாட்கள் கழித்து நேற்றைய தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த பகுதியில் முதலைகள் இழுத்துச் செல்லப்பட்டு பல மீனவர்கள் உயிரிழந்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

பல்வேறு பகுதிகளில் பிடிக்கப்படும் முதலைகளை வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் கலமெட்டிய கடற்கரை பகுதியில் விட்டுச் செல்வதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.