முத்தரப்பு தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு பதில் சிம்பாப்வே

36 0

பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள முத்தரப்பு தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு பதிலாக சிம்பாப்வே அணி விளையாடுவதற்கு இணக்கம் வௌியிட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

உலக கிண்ண இருபதுக்கு 20 தொடரை இலக்கு வைத்து இந்த தொடர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த தொடரில் இலங்கை, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் விளையாடவுள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் பாக்டிகா மாகாணத்தில் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் சில வீரர்கள் உயிரிழந்தனர்.

இதற்கு கண்டனத்தை வௌியிட்ட ஆப்கானிஸ்தான் அணி அந்த தொடரில் இருந்தும் வௌியேறியது.

இதனிடைய சிம்பாப்வே கிரிக்கெட்டுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் அந்த அணி விளையாட விருப்பம் வௌியிட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை குறிப்பிட்டுள்ளது.

நவம்பர் 17 முதல் 29 வரை ராவல்பிண்டி மற்றும் லாகூரில் இந்தப் போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.