எரிவாயுக்குழாய் சேதப்படுத்தப்பட்ட விவகாரம்: சந்தேக நபரை ஜேர்மனியிடம் ஒப்படைக்க போலந்து மறுப்பு

59 0

ரஷ்யாவிலிருந்து ஜேர்மனிக்கு எரிவாயு கொண்டு செல்வதற்காக அமைக்கப்பட்ட Nord Stream என்னும் எரிவாயுக் குழாய்களை சேதப்படுத்தியதாக உக்ரைன் நாட்டவர் ஒருவர் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், அவரை ஜேர்மனியிடம் ஒப்படைக்கமுடியாது என போலந்து நாடு கூறிவிட்டது.

ரஷ்யாவிலிருந்து ஜேர்மனிக்கு எரிவாயு கொண்டு செல்வதற்காக அமைக்கப்பட்ட Nord Stream என்னும் எரிவாயுக் குழாய்களை சேதப்படுத்தியதாக உக்ரைன் நாட்டவரான வோலோடிமிர் (Volodymyr Z) என்பவர் சந்தேகத்தின்பேரில் போலந்து நாட்டின் தலைநகரான Warsaw நகரில் கைது செய்யப்பட்டார்.

 

அவரை தங்களிடம் ஒப்படைக்குமாறு ஜேர்மனி அரசு போலந்து அரசைக் கோரியிருந்தது.

ஆனால், அது நீதிமன்றம் முடிவு செய்யவேண்டிய விடயம் என போலந்து பிரதமரான டொனால்ட் டஸ்க் (Donald Tusk) கூறியிருந்தார்.

இந்நிலையில், வோலோடிமிரை ஜேர்மனியிடம் ஒப்படைக்கமுடியாது என போலந்து நீதிமன்றம் கூறிவிட்டது.

இந்த வழக்கில் வோலோடிமிருக்கு எதிராக போலந்து நீதிமன்றத்திடம் ஆதாரம் எதுவும் இல்லை என்று கூறிய நீதிபதி Dariusz Lubowski, எரிவாயுக்குழாய் சேதப்படுத்தப்பட்டது ஒரு ராணுவ நடவடிக்கை என்றும், அது சட்டவிரோதம் இல்லை என்றும் கூறியுள்ளார்.

வோலோடிமிர், உக்ரைன் அரசின் சார்பில்தான் செயல்பட்டார் என்று கூறிய நீதிபதி, அப்படியானால் அந்த செயலுக்கு உக்ரைன் அரசுதான் பொறுப்பேற்கவேண்டும் என்றும் கூறிவிட்டார்.

எரிவாயுக்குழாய் சேதப்படுத்தப்பட்ட விவகாரம்: சந்தேக நபரை ஜேர்மனியிடம் ஒப்படைக்க போலந்து மறுப்பு | Poland Blocks Extradition Of Nord Stream Suspect

இந்த தீர்ப்பை வரவேற்றுள்ள போலந்து பிரதமரான டொனால்ட் டஸ்க், போலந்து நீதிமன்றம் North Stream 2 எரிவாயுக் குழாயை சேதப்படுத்தியதாக சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட உக்ரைன் நாட்டவரை ஜேர்மனிக்கு நாடுகடத்த மறுத்துவிட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.

 

சமூக ஊடகமான எக்ஸில் இந்த செய்தியை வெளியிட்டுள்ள டஸ்க், அது சரியான முடிவும் கூட என்று குறிப்பிட்டுள்ளதுடன், ’The case is closed’ என்றும் கூறியுள்ளார்.