புலமைப்பரிசில் பரீட்சையின் மறுபரிசீலனை முடிவுகள் வெளியாகின!

53 0

2025 ஓகஸ்ட் 10 ஆம் திகதி நடத்தப்பட்ட, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் மறுதேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ வலைத்தளங்களில் குறித்த பெறுபேறுகளை காண முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk என்ற இணைய முகவரிகளுக்குச் சென்று பரீட்சை எண்ணை உள்ளிடுவதன் மூலம் முடிவுகளைப் பெறலாம்.

 

பெறுபேறுகள் தொடர்பாக ஏதேனும் சிக்கல் இருந்தால், இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் பாடசாலை பரீட்சைகள் அமைப்பு மற்றும் பெறுபேறுகள் கிளையை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, 1911011278420801127845370112785922 மற்றும் 0112784422 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தகவல்களை பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.