கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (17) வரலாற்றில் முதன்முறையாக 22,500 புள்ளிகளைத் தாண்டியது.
இச்சுட்டெண் இன்று 217.65 புள்ளிகள் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்து 22,633.80 புள்ளிகளில் நிறைவடைந்தது.
இதற்கிடையில், S&P SL20 சுட்டெண் 36.39 புள்ளிகள் அதிகரித்து 6,263.03 புள்ளிகளாக உயர்ந்தது.
இதேவேளை, இன்றைய வர்த்தக நாளின் மொத்தப் புரள்வு 11.28 பில்லியன் ரூபாவாகப் பதிவாகியுள்ளது.

