நாளாந்த விசேட சுற்றிவளைப்பில் மேலும் 4,539 பேர் கைது

37 0

நாடளாவிய ரீதியில் நேற்று (15) முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 4,539 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பொலிஸ் அதிகாரிகள், இராணுவத்தினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் கடற்படையினர் ஆகியோர் இணைந்து இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

நேற்று பதிவான தகவல்களின் அடிப்படையில்,

சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நபர்கள் – 28,020

சந்தேகத்தின் பேரில் கைதானவர்கள் – 577

குற்றச்செயல்களுடன் நேரடி தொடர்புடையவர்கள் – 17

பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டவர்கள் – 269

திறந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டவர்கள் – 144

மதுபோதையில் வாகனம் செலுத்தியவர்கள் – 15

கவனக்குறைவாக வாகனம் செலுத்தியவர்கள் – 13

போக்குவரத்து தொடர்பான ஏனைய குற்றங்கள் – 3504