தாவுதி போஹ்ரா சமூகத் தலைவர் சையத்னா முஃபத்தல் சைஃபுதீன் கொழும்பு வருகை!

50 0

தாவுதி போஹ்ரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவர் சையத்னா முஃபத்தல் சைஃபுதீன் (His Holiness Syedna Mufaddal Saifuddin) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த நிலையில், அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

விமான நிலையத்தை வந்தடைந்த தாவுதி போஹ்ரா சமூகத் தலைவரை பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி உள்ளிட்ட குழுவினர் வரவேற்றனர்.

தாவுதி போஹ்ரா சமூகத் தலைவரின் வருகை, இலங்கையில் உள்ள அவர்களது சமூகத்தினரிடையே மத மற்றும் சமூக நடவடிக்கைகளை முன்னெடுக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.