ஹபராதுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகசந்திய, பிலானாவில் உள்ள வீடொன்றில் கழிப்பறை குழி வெடித்துச் சிதறியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தன்று உயிரிழந்த நபர் கார்பைட்டை போட்டு குழியிலிருந்து வாயுவை அகற்ற முயன்றுள்ளார். இதன்போது, குழி வெடித்து சிதறி குறித்த நபருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
அருகில் இருந்த மக்களால் நபர் காலி தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.உயிரிழந்தவர் வாஞ்சாவலை, பிலானாவைச் சேர்ந்த 56 வயதுடையவர் ஆவார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹபராதுவை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

